பஞ்சாப்: ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் குற்றச்சாட்டில் 135 அரசு அதிகாரிகள் கைது- ஆம் ஆத்மி


பஞ்சாப்: ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் குற்றச்சாட்டில் 135 அரசு அதிகாரிகள் கைது- ஆம் ஆத்மி
x

பஞ்சாபில் ஆட்சிக்கு வந்த பிறகு ஆம் ஆத்மி, ஊழலுக்கு எதிராக புகாரளிக்க "உதவி எண்" போன்ற பல நடவடிக்கைகளை தொடங்கியது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுடெல்லியில் மட்டும் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில் மார்ச் மாதம் அமைத்ததில் இருந்து பஞ்சாபில் இதுவரை 210 பேர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. குறிப்பாக லஞ்சம் வாங்கியதாக 135 அரசு அதிகாரிகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாபில் ஆட்சிக்கு வந்த பிறகு ஆம் ஆத்மி, ஊழலுக்கு எதிராக புகாரளிக்க "உதவி எண்" போன்ற பல நடவடிக்கைகளை தொடங்கியது. இதன் மூலம் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளின் ஆடியோ அல்லது வீடியோவை மக்கள் அரசுக்கு அனுப்பி வந்தனர்.

ஊழல் செய்பவர்களை அம்பலப்படுத்த மக்கள் இந்த எண்ணை திறம்பட பயன்படுத்தி முன்வருவதால்,ஊழல் செய்யும் அதிகாரிகளை அம்பலப்படுத்துவதில் ஊழல் தடுப்பு உதவி எண் முன்னணியில் உள்ளது.

பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், 2022 சட்டசபை தேர்தலின் போது ஊழலுக்கு எதிராக போராடுவேன் என உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story