சுதந்திர வரலாறு குறித்த புதிய செயலி மத்திய மந்திரி தொடங்கிவைத்தார்


சுதந்திர வரலாறு குறித்த புதிய செயலி மத்திய மந்திரி தொடங்கிவைத்தார்

இந்திய அரசு நாட்டின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் சுதந்திர போராட்ட தலைவர்களின் தகவல்களை சேகரித்து உள்ளது.

புதுடெல்லி,

சுதந்திர அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக ஆன்லைன் செல்போன் விளையாட்டுகள் மூலம் சுதந்திர வரலாற்றை தெரிந்து கொள்வதற்கான புதிய செல்போன் செயலிகளை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர், 'இந்திய அரசு நாட்டின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் சுதந்திர போராட்ட தலைவர்களின் தகவல்களை சேகரித்து உள்ளது. இது நமது கற்றலை ஈடுபாட்டுடன் மாற்றும். எல்லா வயதினரும் இந்த விளையாட்டுக்களால் ஈர்க்கப்படுவார்கள். விரைவில் அவர்களுக்கு இது பிடித்து விடும். அனைத்து வயதினரும் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பொழுதுபோக்குடன் சுதந்திர வரலாற்றை அறிய உதவும் முக்கிய கல்வி கருவியாக இது விளங்கும்' என்று தெரிவித்தார்.

விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா, ஜிங்கா இந்தியாவின் தலைவர் கிஷோர் கிச்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story