'எந்த ஒரு வரிக்குறைப்பும் வரவேற்கத்தக்கது' - பட்ஜெட் குறித்து காங். எம்.பி. கார்த்திக் சிதம்பரம்
நான் குறைவான வரிவிதிப்பில் நம்பிக்கைகொண்டவன் என்று மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி,
2023-24 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் முக்கிய அம்சமாக புதிய வரி விதிப்பு முறையின் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 5 லட்ச ரூபாயில் இருந்து 7 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம்பெறுவோர் வருமான வரி செலுத்தவேண்டியதில்லை. இந்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு மாதச்சம்பளம் பெறுவோர் நல்ல பலனை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
நான் குறைவான வரிவிதிப்பு அரசில் நம்பிக்கைகொண்டவன். ஆகையால், எந்த ஒரு வரிக்குறைப்பும் வரவேற்கத்தக்கது, ஏனென்றால் மக்கள் கையில் அதிக பணம் கொடுப்பது பொருளாதாரத்தை வளர்ச்சியடையச்செய்வதற்கான சிறந்த வழி' என்றார்.