2ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. கோரிக்கை


2ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. கோரிக்கை
x

2ஜி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

புதுடெல்லி,

2ஜி வழக்கின் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்தார். இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 2ஜி வழக்கு தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்களுக்கு 5 பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டு, விசாரணை மே 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவித்தார்.



Next Story