பத்ம விருதுகள் 2025-க்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்: மத்திய அரசு
பத்ம விருதுகள் 2025-க்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 15 வரை சமர்ப்பிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "2025 குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் 2025-க்கான விண்ணப்ப, பரிந்துரை நடைமுறைகள் 2024 மே 1 முதல் தொடங்கியுள்ளன.
பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 15 ஆகும். பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகளை தேசிய விருதுகள் தளமான https://awards.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story