"தலைமை பொருளாதார ஜோதிடரை நியமித்து விடுங்கள்' நிர்மலா சீதாராமனை சாடிய ப.சிதம்பரம்


தலைமை பொருளாதார ஜோதிடரை நியமித்து விடுங்கள் நிர்மலா சீதாராமனை சாடிய ப.சிதம்பரம்
x

புதுடெல்லி,

பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளை விடுத்து மத்திய நிதியமைச்சர் நாசா புகைப்படங்களை பகிர்ந்து வியப்பு அடைந்து கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,தலைமைப் பொருளாதார ஜோதிடரை வேண்டுமானால் நியமிக்கலாம்' என கேலியாக பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சிதம்பரம் தனது டுட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது; "பணவீக்கம் 7.01 சதவீதமாக உள்ளது, வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமாக உள்ளது. ஆனால் நிர்மலா சீதாராமனோ ஜூபிடர், ப்ளூட்டோ படங்களை பகிர்ந்துள்ளார்.

இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அவர் தன் மீதும், தனது அமைச்சகத்தின் மீதும், பொருளாதார வல்லுநர்கள் மீதும் நம்பிக்கையை இழந்துவிட்டார். அவர் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேற்று கிரகத்தை நாடுவது போல தெரிகிறது. இதற்காக அவர் முதலில் பொருளாதாரம் தெரிந்த ஜோதிடரை நியமிக்க வேண்டும்" எனப்பதிவிட்டுள்ளார்.


Next Story