மகனுடன் வாக்குவாதம்; தடுத்த மனைவியை ஆத்திரத்தில் சுட்டு கொன்ற கணவர்


மகனுடன் வாக்குவாதம்; தடுத்த மனைவியை ஆத்திரத்தில் சுட்டு கொன்ற கணவர்
x

மத்திய பிரதேசத்தில் மகனுடன் வாக்குவாதம் செய்த கணவரை தடுத்த மனைவி சுட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.



இந்தூர்,


மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் விஜய் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஹீராலால். இவர் தனது மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனை கவனித்த லாலின் மனைவி இருவரையும் சமரசப்படுத்தும் நோக்கில் தலையிட்டு உள்ளார்.

அவர், தனது மகனுக்கு ஆதரவாக இருந்துள்ளார் என கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஹீராலால், ரைபிள் ரக துப்பாக்கியை எடுத்து மனைவியை நோக்கி சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் லாலின் மனைவி உயிரிழந்து உள்ளார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதன் முடிவில் லால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. லால், அந்த பகுதியில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார். மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மனைவியை கணவர் படுகொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story