பஞ்சாப்பில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஆயுதங்கள் மீட்பு


பஞ்சாப்பில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஆயுதங்கள் மீட்பு
x

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டன.

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலத்தின் அபோகார் பகுதியில் பாகிஸ்தான் எல்லையையொட்டி போடப்பட்டிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டன. நண்பகல் 12 மணியளவில் அவற்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றினர்.

4 தோட்டா கொள்கலன்களுடன் 2 ஏ.கே.47 துப்பாக்கிகள், மேலும் 4 தோட்டா கொள்கலன்களுடன் 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் சில தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story