பெங்களூருவில் முதல் முறையாக நடைபெற்ற ராணுவ தின அணிவகுப்பு விழா


பெங்களூருவில் முதல் முறையாக நடைபெற்ற ராணுவ தின அணிவகுப்பு விழா
x

பெங்களூருவில் நடைபெற்ற விழாவில், 6 படைப்பிரிவுகளின் வீரர்கள் மற்றும் ராணுவ தளவாடங்களின் அணிவகுப்புகள் நடைபெற்றன.

பெங்களூரு,

தலைநகர் டெல்லியை தவிர்த்து முதல் முறையாக பெங்களூருவில் உள்ள கோவிந்தசாமி அணிவகுப்பு மைதானத்தில் இந்திய ராணுவ தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் 6 படைப்பிரிவுகளின் வீரர்கள் மற்றும் ராணுவ தளவாடங்களின் அணிவகுப்புகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் துருவ் மற்றும் ருத்ரா ஹெலிகாப்டர்களின் சாகசங்களும், ராணுவ வாகனங்கள் மற்றும் டேங்க்குகளின் அணிவகுப்புகளும் இடம்பெற்றன.

இந்த விழாவில் பேசிய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, எதிரிகளை எதிர்த்து போராடும் அளவிற்கு இந்திய ராணுவம் பலம் வாய்ந்ததாக உள்ளது என்றும் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லை பகுதிகளில் வன்முறை, ஆயுத கடத்தல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்கள் பலமுறை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



Next Story