அசாமில் காட்டு யானை தாக்கியதில் ராணுவ வீரர் பலி


அசாமில் காட்டு யானை தாக்கியதில் ராணுவ வீரர் பலி
x

கோப்புப்படம் 

இந்த சம்பவம் ராணுவம் மற்றும் மாநில அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கவுகாத்தி,

அசாமில் கவுகாத்தி நகரின் கிழக்கு பகுதியில் நரேங்கி ராணுவ கண்டோன்மென்ட் உள்ளது. அம்சாங் வனவிலங்குகள் சரணாலயத்தை ஒட்டியுள்ள இந்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது.

இந்த கண்டோன்மென்ட் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் காம்லியன் காப் என்ற ராணுவ வீரர் பணியில் இருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் காட்டு யானை ஒன்று அங்கு வந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த யானை ராணுவ வீரரை பலமாக தாக்கியது. அத்துடன் காலால் மிதிக்கவும் செய்தது.

இதில் படுகாயமடைந்த ராணுவ வீரர், பசிஸ்தா பகுதியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ராணுவம் மற்றும் மாநில அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story