4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் குழந்தைகள் நல அமைச்சகம் தகவல்


4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் குழந்தைகள் நல அமைச்சகம் தகவல்
x

நாட்டில் ‘ஊட்டச்சத்து மாதம்-2022’ அனுசரிக்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

நாட்டில் 'ஊட்டச்சத்து மாதம்-2022' அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனையொட்டி ஊட்டச்சத்து தோட்டங்கள் அல்லது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தோட்டங்களில் கோழிப்பண்ணை, மீன்பிடி பண்ணைகளை அமைக்கும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக இதுவரை 1.5 லட்சம் நிகழ்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. மேலும், சிறுதானியங்கள் மற்றும் சமையலறை தோட்டம் அமைப்பது குறித்தும் 75 ஆயிரத்துக்கும் அதிகமான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. புதிய அங்கன்வாடி மையங்களிலோ அல்லது அவற்றுக்கு அருகிலோ ஊட்டச்சத்து தோட்டங்களை அமைப்பதற்கு இடங்களை தேர்வுசெய்ய இதுவரை 40 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளின் கீழ் நாடு முழுவதும் 4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களில் 1.10 லட்சம் மூலிகைச்செடிகள் நடப்பட்டு உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story