வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
வாகன திருட்டில் ஈடுபட்ட ௩ பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
பெங்களூரு பானசாவடி போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் இருசக்கர வாகனங்களை திருடி விற்றதாக லிங்கராஜபுரத்தை சேர்ந்த சாலமன் என்கிற அப்பி (வயது 20), முகமது உமர் (19), மணிகரண் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் 3 பேரும் சேர்ந்து வாகன நிறுத்தும் இடம், வீடுகள், கடைகள் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 26 இருசக்கர வாகனங்களை திருடியதும், அந்த இருசக்கர வாகனங்களுக்கு புதிய பதிவெண் பலகை பொருத்தி விற்று வந்ததும் தெரியவந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான 6 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர். கைதான 3 பேர் மீதும் பானசாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story