பா.ஜனதா பிரமுகரின் சகோதரர் மகனின் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த 2 பேர் கைது


பா.ஜனதா பிரமுகரின் சகோதரர் மகனின் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த 2 பேர் கைது
x

பா.ஜனதா பிரமுகரின் சகோதரர் மகனின் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த ௨ பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு காச்சரக்கனஹள்ளியில் வசித்து வருபவர் அனில் ரெட்டி. இவர், சர்வக்ஞநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்ட பத்மநாப ரெட்டியின் சகோதரரின் மகன் ஆவார். கடந்த 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது அனில் ரெட்டி, அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், வாகனம் நிறுத்தும் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த அனில் ரெட்டியின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தினர்.

பின்னர் சிகரெட் புகைக்க 2 பேர் முயன்றனர். மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதனால் சிகரெட்டுகளை வீசிவிட்டு 2 பேரும் தப்பித்து சென்றிருந்தனர். இதுகுறித்து பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், அனில் ரெட்டி மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கே.ஜி.ஹள்ளியை சேர்ந்த முபாரக் மற்றும் ஹபீஜ் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story