கெஜ்ரிவால் உரிய நேரத்தில் பதில் கொடுப்பார் - நிதிஷ் குமார்
தனக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகள் குறித்து கெஜ்ரிவால் உரிய நேரத்தில் பதிலளிப்பார் என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
பாட்னாவில் நேற்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், "கெஜ்ரிவாலுக்கு எதிராக என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். அவர் மதிப்புக்குரிய மனிதர். அவர் தனது மாநிலத்தில் நிறைய வளர்ச்சிப்பணிகளைச் செய்திருக்கிறார். அவருக்கு எதிராக எடுக்கப்படுகிற எல்லா நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் உரிய நேரத்தில் பதில் கொடுப்பார்" என பதில் அளித்தார்.
Related Tags :
Next Story