புயல் காரணமாக திருப்பதியில் 189 பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பல லட்சம் நஷ்டம்


புயல் காரணமாக திருப்பதியில் 189 பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பல லட்சம் நஷ்டம்
x

புயல் காரணமக திருப்பதியில் இருந்து நெல்லூர், விஜயவாடா, குண்டூர், ஐதராபாத் மற்றும் திருமலைக்கு செல்லும் ஆந்திர மாநில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.

திருப்பதி,

மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதியில் இருந்து நெல்லூர், விஜயவாடா, குண்டூர், ஐதராபாத் மற்றும் திருமலைக்கு செல்லும் ஆந்திர மாநில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.

நேற்று முன்தினம் 101 பஸ்களும், நேற்று 88 பஸ்களும் நிறுத்தப்பட்டது. இதனால் 66,150 கி.மீ. இயக்கப்பட வேண்டிய பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ரூ.35 லட்சம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story