பாலம் இல்லாததால் ஓடையை கடக்க மாணவர்கள் சிரமம்


பாலம் இல்லாததால்   ஓடையை கடக்க மாணவர்கள் சிரமம்
x

பாலம் இல்லாததால் ஓடையை கடக்க மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் மதினூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளனர். இந்த கிராமத்தை ஒட்டி ஒரு ஓடை செல்கிறது. அந்த ஓடையை கடக்க இதுவரை பாலம் கட்டப்படவில்லை. இதனால் கிராம மக்களும், மாணவ-மாணவிகளும் ஓடை வழியாக நடந்து சென்று வருகிறார்கள். சமீபத்தில் பெய்த கனமழையால் அந்த ஓடையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஓடையில் தேங்கிய நீரில் நடந்து கடந்து செல்கிறார்கள். அதாவது முட்டளவுக்கு தேங்கிய நீரில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நடப்பதால் சீருடைகள் நனைந்துவிடுகிறது. ஈர சீருடை அணிந்தபடி வகுப்பறைகளுக்கு சென்று வருகிறார்கள். அதுபோல் ஊருக்கும் திரும்பும்போதும் ஓடையை இவ்வாறே அவர்கள் கடக்கிறார்கள். எனவே விரைவில் ஓடை மீது பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story