அசாம் வெள்ளம் : 55 லட்சம் பேர் பாதிப்பு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்வு
அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது
கவுகாத்தி,
அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.மழை-வெள்ளம் ஒருபுறம் இருக்க பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதைப்போல தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.மொத்தம் 862 நிவாரண முகாம்களில் 2.62 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
32 மாவட்டங்களில் 55 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் .இதுவரை வெள்ளத்தில் சிக்கி 89 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகூன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் நிலவரங்களை ஆராய்ந்தார்.