அசாம் வெள்ளத்தால் 21 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு


அசாம் வெள்ளத்தால் 21 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு
x

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சத்தை வழங்கியுள்ளார்.

கவுகாத்தி,

அசாமில் தொடர்ச்சியாக பல நகரங்களில் இந்த வாரம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

அசாம் வெள்ளத்திற்கு 27 மாவட்டங்களை சேர்ந்த 2,894 கிராமங்களில் வசிக்கும் 25.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டதன் கார்ணமாக இந்த எண்ணிக்கை தற்போது 21 லட்சமாக குறைந்துள்ளது.

பஜாலி, பக்ஸா, பர்பேடா, பிஸ்வநாத், கச்சார், சிராங், தர்ராங், தேமாஜி, துப்ரி, திப்ரூகர், திமா ஹசாவ், கோல்பாரா, கோலாகாட், ஹைலகண்டி, ஹோஜாய், கம்ரூப், கம்ரூப் பெருநகரம், கர்பி அங்லாங் மேற்கு, கரீம்கஞ்ச், லகிம்பூர், மோரிகாவன், நகாவன், சோனித்பூர், தெற்கு சல்மாரா, தமுல்பூர் மற்றும் உடல்குரி ஆகிய 27 மாவட்ட மக்களும் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக, பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமைப்புகள் வெள்ளத்தை அடுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சத்தை வழங்கி உதவிக்கரம் நீட்டினார். அவரது அக்கறை மற்றும் தாராள மனப்பான்மைக்கு எனது மனமார்ந்த நன்றி" என்று அம்மாநில முதல் மந்திரி டுவீட் செய்துள்ளார்.


Next Story