சிறந்த உள்கட்டமைப்புதான் வளர்ச்சிக்கு அடிப்படை: ஜனாதிபதி திரவுபதி முர்மு


சிறந்த உள்கட்டமைப்புதான் வளர்ச்சிக்கு அடிப்படை: ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

எந்தவொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சிறந்த உள்கட்டமைப்புதான் அடிப்படையான ஒன்றாகும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, கவுகாத்தியில் உள்ள சங்கர்தேவ் கலாசேத்ரா அரங்கில் இருந்து காணொலி மூலம் மாநில மற்றும் மத்திய அரசுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிறைவடைந்த நலதிட்டங்களை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது; எந்தவொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சிறந்த உள்கட்டமைப்புதான் அடிப்படையான ஒன்றாகும்.

இன்று தொடங்கப்பட்டுள்ள சுகாதாரம், கல்வி, ரயில்வே, சாலை, பெட்ரோலியம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், அசாம் உட்பட வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் வணிகம், வேலை வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கும், இதனால் பொருளாதாரம் வலுவடையும்" என்றார்.


Next Story