ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை
ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
பெலகாவி: பெலகாவி அருகே மஜகாவி கிராமத்தில் வசித்து வந்தவர் எல்லேஷ்(வயது 27). இவர் பெயிண்டர் ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து எல்லேஷ் செல்போன் பேசியபடி வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் எல்லேஷ் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் பெலகாவி புறநகர் போலீசார் அங்கு சென்று எல்லேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் எல்லேசை மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் அவரை கொலை செய்தது யார்?, என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை. இந்த கொலை சம்பவம் குறித்து பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.