ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் உதவியாளர் மீது தாக்குதல் மர்மநபர்களுக்கு வலைவீச்சு


ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் உதவியாளர் மீது தாக்குதல்   மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் உதவியாளர் மீது தாக்குதல் மர்மநபர்களுக்கு வலைவீச்சு

சிக்கமகளூரு: தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா. இவரது உதவியாளராக பணியாற்றி வருபவர் பிரஜ்வல். நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தில் இருந்து வேலையை முடித்துக்கொண்டு பிரஜ்வல் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை, மர்மநபர்கள் 3 பேர் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பிரஜ்வல் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதைதொடர்ந்து அங்கிருந்தவர்கள், பிரஜ்வல்லை உடனே மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஒன்னாளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஒன்னாளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரஜ்வல்லை தாக்கிய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அறிந்ததும் நேற்று காலை ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் உதவியாளர் பிரஜ்வலிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.


Next Story