உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்
உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
பெங்களூரு
பெங்களூரு சிவாஜிநகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சீனிவாசமூர்த்தி (வயது 49). இவர், டி.தாசரஹள்ளியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் பணி முடிந்ததும் போலீஸ் நிலையத்தில் இருந்து சீனிவாச மூர்த்தி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில் அவர் திடீரென்று மயக்கம் அடைந்து விழுந்தார். உடனடியாக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாச மூர்த்தி இறந்துவிட்டார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story