பன்னரகட்டா பூங்காவில் பெண் சிங்கம் செத்தது


பன்னரகட்டா பூங்காவில்   பெண் சிங்கம் செத்தது
x

பன்னரகட்டா பூங்காவில் பெண் சிங்கம் செத்தது.

பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சனா என்ற பெண் சிங்கம் வளர்க்கப்பட்டு வந்தது. அந்த சிங்கம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் செத்துவிட்டது. அந்த சிங்கத்திற்கு 13 வயதாகிறது. இதுவரை அந்த சிங்கம், 10 குட்டிகளை போட்டு இருப்பதாக அதிகாரிகள் தொிவித்துள்ளனர். இதயம் சம்பந்தப்பட்ட நோயால் அந்த சிங்கம் அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக சிகிச்சை அளித்தும் இறந்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story