சிக்கமகளூரு தத்தா குகை கோவிலில்சி.டி.ரவி எம்.எல்.ஏ. சாமி தரிசனம்


சிக்கமகளூரு  தத்தா குகை கோவிலில்சி.டி.ரவி எம்.எல்.ஏ. சாமி தரிசனம்
x
தினத்தந்தி 9 April 2023 12:15 PM IST (Updated: 9 April 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு சந்திரதிரிகோண மலையில் உள்ள தத்தா குகை கோவிலில் சி.டி.ரவி எம்.எல்.ஏ. சாமி தரிசனம் செய்தார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு சந்திரதிரிகோண மலையில் உள்ள தத்தா குகை கோவிலில் சி.டி.ரவி எம்.எல்.ஏ. சாமி தரிசனம் செய்தார்.

சி.டி.ரவி சாமி தரிசனம்

சிக்கமகளூரு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சி.டி.ரவி. பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரான இவர், இந்த முறையும் சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த நிலையில் சி.டி.ரவி நேற்று முன்தினம் மாலை சந்திரதிரிகோண மலையில் இருக்கும் தத்தா குகை கோவிலுக்கு சென்றார். அங்கு தத்தா பாதத்தை அவர் தரிசனம் செய்தார். மேலும் அர்ச்சகர் மூலம் சி.டி.ரவி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் வெளியே வந்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குமாரசாமிக்கு பயம்

சிக்கமகளூரு தொகுதியில் மீண்டும் ெவற்றி பெற தத்தா கோவிலுக்கு வந்து வழிபட்டுள்ளேன். தேர்தலில் நான் வெற்றி பெற எனக்கு தத்தாவின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும். கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டினேன்.

குமாரசாமிக்கு பா.ஜனதாவை பார்த்து பயம் வந்துள்ளது. பிரதமர் மோடியை பார்த்து பயந்து வந்த அவர், தற்போது நடிகர்கள் பவன் கல்யாண், சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக கூறி உள்ளதால் கூடுதல் பயம் ஏற்பட்டுள்ளது. இந்த பயத்தால் குமாரசாமி வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story