யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி; பலர் மாயம்! நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்
உத்தரப்பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரப்பிரதேசத்தின் பண்டா பகுதியில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது அதில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவம் இன்று நடந்துள்ளது. அந்த படகில் ஏறத்தாழ 35 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த படகு பண்டா மாவட்டத்தின் மார்க் பகுதியிலிருந்து பதேபூர் மாவட்டத்தின் ஜரோலி பகுதிக்கு செல்லும்போது விபத்து நிகழ்ந்துள்ளது. ஆற்றுக்குள் இருப்பவர்களை மீட்க நீச்சல் வீரர்கள் அழைக்கப்பட்டு மீட்பு பணி நடைபெறுகிறது.
சில பயணிகள் நீந்தி கரை சேர்ந்துள்ளதாகவும் மீதமுள்ளவர்கள் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.இதுவரை நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story