மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் ரூ.2.33 கோடி உண்டியல் வருவாய்


மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில்  ரூ.2.33 கோடி உண்டியல் வருவாய்
x

மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் ரூ.2.33 கோடி உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது.

மைசூரு: மைசூரு மாவட்டம் சாமுண்டிமலையில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கன்னட ஆடி மாதத்தையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தது. இதில் பங்கேற்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்ததுடன், அம்மனுக்கு காணிக்கையும் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று கோவில் உண்டியல்கள் அனைத்தும் திறந்து எண்ணப்பட்டன.

இந்த பணியில் 250-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில் கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வகையில் ரூ.2 கோடியே 33 லட்சத்து 51 ஆயிரத்து 270 வருவாய் கிடைத்தது. அதுபோல் 270 கிராம் தங்கமும், ஒரு கிலோ வெள்ளியும் கிடைத்தது. மேலும் வெளிநாட்டு பணம், தடை செய்யப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளும் உண்டியலில் கிடைத்தன. அதுமட்டுமல்லாமல் சிறப்பு தரிசன கட்டணம் (ஒருநபருக்கு ரூ.270) மூலம் ஒரு கோடியே 3 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயும் கிடைத்துள்ளது.


Next Story