சிக்கன் கபாப் குறைவாக கொடுத்ததால் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு


சிக்கன் கபாப் குறைவாக கொடுத்ததால் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 20 Jan 2023 6:45 PM GMT (Updated: 20 Jan 2023 6:47 PM GMT)

சிக்கன் கபாப் குறைவாக கொடுத்ததால் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோனனகுண்டே:

பெங்களூரு கோனனகுண்டே பகுதியில் பாப்பண்ணா என்பவருக்கு சொந்தமான 'மால்குடி நாட்டி ஸ்டைல்' என்ற ஓட்டல் உள்ளது. இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி இரவு 11 மணி அளவில் அவரது ஓட்டலுக்கு வந்த 4 பேர், சிக்கன் கபாப் கேட்டனர். அப்போது அவர்களுக்கு ஓட்டல் ஊழியர் ரூ.120-க்கு சிக்கன் கபாப் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் ரூ.90 மட்டும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு சிக்கன் கபாப் குறைவாக கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 4 பேரும், ஓட்டல் ஊழியருடன் தகராறு செய்ததுடன் அவர்களை தாக்க முயன்றதாக தெரிகிறது.

அப்போது ஓட்டல் உரிமையாளர் பாப்பண்ணா அவர்களை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து ஓட்டல் உரிமையாளர் பாப்பண்ணாவை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அவர், உதடு மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கோனனகுண்டே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story