நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் - மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு


நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் - மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு
x

தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் வருகிற 27-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் வருகிற 27-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் அடிப்படையில் மத்திய அரசு குத்தகைக்கு விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 6-வது கட்ட ஏலத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் நடத்தியது. இதற்கு தொழில்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதில், 27 சுரங்கங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏலம் கோரி இருந்த நிலையில், இந்த நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் வரும் 27-ம் தேதி மீண்டும் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story