டெல்லியில் அவுரங்கசீப் பாதையின் பெயர் அப்துல் கலாம் பாதை என பெயர் மாற்றம்


டெல்லியில் அவுரங்கசீப் பாதையின் பெயர் அப்துல் கலாம் பாதை என பெயர் மாற்றம்
x

டெல்லியில் அவுரங்கசீப் பாதையின் பெயர் அப்துல் கலாம் பாதை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் லுட்யென் பகுதியில் உள்ள அவுரங்கசீப் பாதையின் பெயர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பாதை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த முடிவை புதுடெல்லி நகராட்சி கவுன்சில் துணை தலைவர் சதீஷ் உபாத்யாய் இன்று அறிவித்து உள்ளார்.

அதன்பின் அவர் கூறும்போது, இந்திய கலாசாரங்களை அழிக்க முற்பட்டவர் அவுரங்கசீப். அதனால், அவுரங்கசீப் பெயரில் எந்தவொரு சாலையும் இருக்க கூடாது என கூறியுள்ளார். 17-ம் நூற்றாண்டு முகலாய அரசரான அவருக்கு நாட்டில் இடமில்லை என கூறியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு இதே லுட்யென் பகுதியில் இருந்த அவுரங்கசீப் சாலை ஆனது, பின்னர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பின்னர் அதே பகுதியில் அமைந்த, அவுரங்கசீப் பாதையின் பெயர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பாதை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்புதலை சதீஷ் உபாத்யாய் நேற்று வழங்கினார்.

இந்த பாதையானது, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலை மற்றும் பிருத்விராஜ் சாலை ஆகியவற்றை இணைக்கிறது.


Next Story