அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; ராஜஸ்தானில் 22-ந்தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவு
முன்னதாக மத்திய அரசு அலுவலகங்களுக்கு 22-ந்தேதி அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 22-ந்தேதி அனைத்து மீன் கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் வதை கூடங்களை மூடுவதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வரும் 22-ந்தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story