தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் கன்னட நடிகை அபிநயாவுக்கு ஜாமீன்சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் கன்னட நடிகை அபிநயாவுக்கு ஜாமீன்சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

2010-ம் ஆண்டு நடிகை அபிநயா உள்பட 3 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகை அபிநயா. இவர் சந்திரா லே-அவுட் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரது சகோதரருக்கும், லட்சுமி தேவி என்ற பெண்ணுக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அபிநயாவின் சகோதரர் சீனிவாஸ், வரதட்சணை கேட்டு லட்சுமி தேவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதற்கு அபிநயா, அவரது தாய் ஜெயம்மா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த வழக்கில் பெங்களூரு கோர்ட்டு கடந்த 2010-ம் ஆண்டு நடிகை அபிநயா உள்பட 3 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை கர்நாடக ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதையடுத்து தலைமறைவான நடிகை அபிநயா, அவரது தாய் ஜெயம்மா, மற்றும் சகோதரர் சீனிவாஸ் ஆகியோர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

முன்னதாக கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து நடிகை அபிநயா, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, நடிகை அபிநயா, அவரது தாய் ஜெயம்மா, சகோதரர் சீனிவாஸ் ஆகிய 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Next Story