பண்ணைவீட்டில் விபசார விடுதி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவருக்கு ஜாமீன் - மேகாலயா ஐகோர்ட் உத்தரவு


பண்ணைவீட்டில் விபசார விடுதி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவருக்கு ஜாமீன் - மேகாலயா ஐகோர்ட் உத்தரவு
x

பண்ணைவீட்டில் விபசார விடுதி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மேகாலயா பா.ஜனதா துணைத் தலைவருக்கு மேகாலயா ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.

மேகாலயா:

மேகாலயா பா.ஜனதா துணைத் தலைவர் பெர்னார்ட் என். மரக் கேரா ஹில்ஸ் பகுதியின் சுயாதீன மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருக்கிறார். இவருக்கு மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் துராவில் ஒரு பண்ணை வீடு உள்ளது. அங்கு விசார விடுதி நடத்தபடுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு இருந்து 23 பெண்கள், 73 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், ஐந்து சிறுமிகளையும் போலீசார் மீட்டனர். மேலும் 400 மதுபான பாட்டில்கள் மற்றும் 500 ஆணுறைகள் அடங்கிய பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதன்பின் தலைமறைவாகிய மரக்கை உத்தர பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மேகாலயா ஐகோர்ட் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. தலைமறைவாகவோ அல்லது ஆதாரங்களை சிதைக்கவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ கூடாது மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மராக் ஜாமீன் பெற்றார்.


Next Story