சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கிய கார்: வங்கி மேலாளர், காசாளர் பலி


சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கிய கார்: வங்கி மேலாளர், காசாளர் பலி
x

சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற மழைநீரில் கார் மூழ்கியது. இதில் காரில் இருந்த வங்கி மேலாளர், காசாளர் உயிரிழந்தனர்.

சண்டிகர்,

தலைநகர் டெல்லி, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனிடையே, அரியானாவின் குருகிராம் செக்டார் 31 பகுதியில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் புன்னியஸ்ரீ சர்மா மற்றும் காசாளர் விராஜ் இருவரும் நேற்று இரவு காரில் பரிதாபாத்திற்கு சென்றுகொண்டிருந்தனர்.

பரிதாபாத் அருகே உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் கார் சென்றுகொண்டிருந்தது. கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இரவு நேரம் என்பதால் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதை கவனிக்காமல் காரை இயக்கியுள்ளனர்.

இதனால் காருக்குள் மழைநீர் புகுந்துள்ளது. கார் மழைநீரில் மூழ்கியது. காரில் இருந்த வங்கி மேலாளர் புன்னியஸ்ரீ சர்மா மற்றும் காசாளர் விராஜும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதில் 2 பேரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார், சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கிய காரை மீட்டனர். மேலும், காரில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story