வருகிற 2025-ம் ஆண்டுக்குள் கர்நாடகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


வருகிற 2025-ம் ஆண்டுக்குள் கர்நாடகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

வருகிற 2025-ம் ஆண்டுக்குள் கர்நாடகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:

கர்நாடக திட்ட செயலாக்கம் மற்றும் புள்ளியல் துறை சார்பில் 'ஒரு டிரில்லியன் டாலர்' (இந்திய மதிப்பில் ரூ.80 லட்சம் கோடி) பொருளாதாரம் தொலைநோக்கு பார்வை என்ற அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:-

வருகிற 2025-ம் ஆண்டுக்குள் கர்நாடகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழு தனது பணிகளை மேற்கொள்ளும். இந்த செயல் திட்ட செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பணியை நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் மேற்கொள்வார். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் இந்த செயல்திட்டம் உருவாக்கப்படும். இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய செயல்பட்டு வருகிறது. அதில் கர்நாடகத்தின் பங்கு ஒரு டிரில்லியன் டாலராக இருக்க வேண்டும். இந்த இலக்கை அடையும் நோக்கத்தில் மங்களூரு துறைமுகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. கடலோர காரிடார் திட்டத்தையும் செயல்படுத்துகிறோம். இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story