தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்குவாரி நடத்த வேண்டும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்குவாரி நடத்த வேண்டும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்குவாரி நடத்த வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:

பெங்களூரு துமகூரு ரோடு, பி.ஐ.இ.சி.யில் இந்திய கிரானைட் மற்றும் ஸ்டோன் தொழில் கூட்டமைப்பு - கர்நாடக அரசு சார்பில் 15-வது சர்வதேச கிரானைட் கண்காட்சி, மேளா நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். பின்னர் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பொருட்களை அவர் பார்வையிட்டார்.

முன்னதாக கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

கர்நாடகத்தில் கற்கள் மற்றும் கிரானைட் தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளையும், உதவிகளையும் மாநில அரசு செய்து கொடுத்து வருகிறது. கற்கள் மற்றும் கிரானைட் தொழில் செய்வதற்கு தகுந்த சூழ்நிலை மாநிலத்தில் உள்ளது. இயற்கையை பாதுகாப்பதன் மூலமாக வரும் நாட்களில், நாம் லாபம் அடைய முடியும். மாநிலத்தில் கல்குவாரிகள், கனிம சுரங்கங்கள் உள்ளன. அங்கு ஏதேனும் விபத்துகள் நடைபெறுகிறது. பூமி தாயின் பாதுகாப்பு கவசமான கற்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்து வருகிறது. கல்குவாரிகளை நடத்துபவர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவற்றை நடத்த வேண்டும். இதன்மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story