பெங்களூரு மாநகராட்சி தேர்தல் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் குறித்த வழக்கின் விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 22-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. சில தொழில்நுட்ப காரணங்களால் விசாரணை 26-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்றைய தினமும் சில காரணங்களால் விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை 28-ந் தேதி (நாளை மறுநாள்) நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அன்றைய தினம் பெங்களூரு மாநகராட்சிக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்று தெரியவரும்.
Related Tags :
Next Story