மதுஅருந்தியதற்கு பணம் கேட்டதால் மதுபான விடுதி ஊழியர் மீது தாக்குதல்


மதுஅருந்தியதற்கு பணம் கேட்டதால்  மதுபான விடுதி ஊழியர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதுஅருந்தியதற்கு பணம் கேட்டதால் மதுபான விடுதி ஊழியர் மீது தாக்குதல் நடந்தது.

பெங்களூரு: பெங்களூரு நந்தினி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு மதுபான விடுதி உள்ளது. அந்த விடுதிக்கு ஒரு கும்பலினர் மதுஅருந்துவதற்காக சென்றார்கள். பின்னர் மதுஅருந்திவிட்டு குடிபோதையில் இருந்த அந்த கும்பலினரிடம் மதுவுக்கான பணத்தை கொடுக்கும்படி ஊழியர் கேட்டுள்ளார். ஆனால் அந்த கும்பலினர் பணம் கொடுக்க மறுத்து விட்டு, அங்கிருந்து சென்று விட்டார்கள்.

சிறிது நேரத்தில் மீண்டும் அந்த கும்பலினர் மதுபான விடுதிக்கு வந்து குடிபோதையில் ஊழியருடன் சண்டை போட்டார்கள். மதுபான விடுதி மீது பீர் பாட்டிலை வீசினார்கள். அத்துடன் மதுபான விடுதி ஊழியரையும் பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு அந்த கும்பல் ஓடிவிட்டது. இதில், ஊழியருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நந்தினி லே-அவுட் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். குடிபோதையில் சில வாலிபர்கள் மதுபான விடுதி ஊழியரை தாக்கியது தெரிந்தது. இதுகுறித்து நந்தினி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.


Next Story