ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால்வயதான நோயாளியை தாக்கிய ஆண் செவிலியர் கைது


ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால்வயதான நோயாளியை தாக்கிய ஆண் செவிலியர் கைது
x
தினத்தந்தி 2 April 2023 12:15 PM IST (Updated: 2 April 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் வயதான நோயாளியை தாக்கிய ஆண் செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மங்களூரு-

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் வயதான நோயாளியை தாக்கிய ஆண் செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வயதான நோயாளி

தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி நகர் கோடங்கல்லு அருகே ஹட்கோ காலனியை சேர்ந்த முதியவர் ஒருவர் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். அந்த வயதான நோயாளியை கதக்கை சேர்ந்த சிவானந்தா (வயது 19) என்கிற ஆண் செவிலியர் கவனித்து வந்தார். அதாவது, அவர் முதியவரின் வீட்டில் தங்கி இருந்து அவரை கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் முதியவரின் உடலில் காயங்கள் இருந்ததால் அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து சிவானந்தாவிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

ஓரினச்சேர்க்கைக்கு...

ஆனாலும் சந்தேகம் தீராத உறவினர்கள், முதியவர் சிகிச்சை பெறும் அறையில் கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை முதியவரின் உறவினர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, சிவானந்தா முதியவரை ஓரினச்சேர்க்கைக்கு வலியுறுத்துவதும், அதற்கு மறுத்த அவரை தாக்குவதும் பதிவாகி இருந்தது. இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து முதியவரின் உறவினர்கள் வீடியோ ஆதாரத்துடன் மூடபித்ரி போலீசில் புகார் கொடுத்தனர். அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மூடபித்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண் செவிலியரான சிவானந்தாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story