தேனீக்கள் கடித்து 12 வயது சிறுவன் பலி


தேனீக்கள் கடித்து 12 வயது சிறுவன் பலி
x

பண்ட்வால் அருகே, தேனீக்கள் கடித்து 12 வயது சிறுவன் பலியானான்.

மங்களூரு;


உடுப்பி மாவட்டம் பண்ட்வால் தாலுகா தளியாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹக்கீர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இவர்களுக்கு மசின்(வயது 12) என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் மசின் நேற்றுமுன்தினம் தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது அருகில் உள்ள மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து மசினை பயங்கரமாக கடித்தன. இதில் அந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறினான். அவனது அலறல் சத்தம் கேட்டு மசினின் பெற்றோா் ஓடிவந்து அவனை மீட்டனர். பின்னர் அவனை சிகிச்சைக்காக பண்ட்வாலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் மசின் பாிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story