மக்களின் பணம் பாஜகவின் நண்பர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது; மம்தா பானர்ஜி விமர்சனம்
எல்ஐசி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மக்கள் செலுத்தியுள்ள பணத்தை தங்களது கட்சி நலனுக்காக செயல்படும் நண்பர்களுக்காக பயன்படுத்தி வருவதாக பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தா,
எல்ஐசி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மக்கள் செலுத்தியுள்ள பணத்தை தங்களது கட்சி நலனுக்காக செயல்படும் நண்பர்களுக்காக பயன்படுத்தி வருவதாக பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது: -
இந்த அரசாங்கம் நீண்ட நாட்களுக்கு நீடித்தால் எல்ஐசி அதிக அளவில் பாதிக்கப்படும். எல்ஐசியின் பங்குகள் விற்கப்படும் விதத்தை பார்த்தால் அச்சம் ஏற்படுத்துகிறது. எல்ஐசி மற்றும் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள மக்களின் பணம் பாஜகவுக்கு உதவியாக உள்ள அவர்களது நண்பர்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எல்ஐசி மற்றும் வங்கிகளில் நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்பதே உங்களுக்குத் தெரியாது" இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story