மனைவியின் தலையுடன் பஸ் நிலையத்திற்கு வந்த கணவன் - பயணிகள் அதிர்ச்சி


மனைவியின் தலையுடன் பஸ் நிலையத்திற்கு வந்த கணவன் - பயணிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 16 Feb 2024 1:28 PM IST (Updated: 16 Feb 2024 2:10 PM IST)
t-max-icont-min-icon

கவுதம் குச்சைத் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தின் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் குடும்ப சண்டையில் நடந்த கொடூர கொலை மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காதலர் தினமான 14ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

40 வயது நிரம்பிய நபர் ஒருவர், ஒரு கையில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை, மற்றொரு கையில் கத்தியுடன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கத்தி கூச்சலிட்டபடி சுற்றித் திரிந்துள்ளார். இதைப் பார்த்த பயணிகள் பீதியடைந்தனர். இந்த பயங்கர காட்சியை சிலர் தங்களின் செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் பெயர் கவுதம் குச்சைத் (வயது 40) என்பதும், குடும்ப பிரச்சினையில் மனைவியை கொலை செய்து, தலையை வெட்டி பேருந்து நிலையத்திற்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது.

கவுதம் குச்சைத் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் இதற்கு முன்பு கூறியுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு, கொல்கத்தாவில் உள்ள அலிபூர் உயிரியல் பூங்காவிற்கு குச்சைத் சென்றபோது, சிங்கம் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏறி குதித்து படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story