மேற்குவங்காளத்தின் ஒரே காங்கிரஸ் எம்.எல்.ஏ. திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்...!


மேற்குவங்காளத்தின் ஒரே காங்கிரஸ் எம்.எல்.ஏ. திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்...!
x

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மம்தா ஆட்சியை தக்கவைத்தார். அதேவேளை காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் படுதோல்வியடைந்தது.

இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் சாஹர்திகி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய பெரான் பிஸ்வா அபார வெற்றிபெற்றார். இதன் மூலம் மேற்குவங்காளத்தின் ஒரே காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக பெரான் பிஸ்வா செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், மேற்குவங்காளத்தின் ஒரே காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பெரான் பிஸ்வா இன்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் பிஸ்வா திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். இதன் மூலம் மேற்குவங்காளத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது.


Next Story