ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்வதில் பெங்களூரு முன்னேற்றம்


ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்வதில் பெங்களூரு முன்னேற்றம்
x
தினத்தந்தி 1 March 2023 11:00 AM IST (Updated: 1 March 2023 11:03 AM IST)
t-max-icont-min-icon

ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்வதில் பெங்களூரு முன்னேற்றம் அடைந்துள்ளது.

பெங்களூரு-

மருத்துவ துறையில் பெங்களூரு அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அதாவது பெங்களூருவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு, ஆஸ்பத்திரிகளில் ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ரோபோக்கள் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக தனியார் ஆஸ்பத்திரிகளில் உயர் தொழில்நுட்பங்கள் மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் பாதுகாப்பான முறையில் நேரத்தை மிச்சப்படுத்தி சிகிச்சைகள் நடக்கின்றன. பெங்களூருவுக்கு மருத்துவ காரணங்களுக்காக வெளிநாட்டினர் பலர் படையெடுத்து வருகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெங்களூருவின் பங்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால், மருத்துவ வளர்ச்சியில் பெங்களூரு முன்னேற்றம் கண்டு அடுத்த கட்டத்தை எட்டிவிட்டது என்று தான் கூற வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.




Next Story