பெங்களூரு டவுன்ஹால் கட்டிட வாடகை குறைப்பு- மாநகராட்சி தகவல்


பெங்களூரு டவுன்ஹால் கட்டிட வாடகை குறைப்பு-  மாநகராட்சி தகவல்
x

பெங்களூரு டவுன்ஹால் கட்டிட வாடகை குறைத்து மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-பெங்களூருவில் டவுன்ஹால் உள்ளது. அது மாநகராட்சிக்கு சொந்தமானது. அந்த கட்டிடம் கூட்டங்கள், விழாக்கள், நாடகங்களுக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது. அந்த கட்டிடத்திற்கு ஒரு நாள் வாடகை குளுகுளு வசதியுடன் ரூ.75 ஆயிரமும், குளுகுளு வசதி இல்லாமல் ரூ.60 ஆயிரத்திற்கும் வழங்கப்படுகிறது.அரை நாளுக்கு கட்டிடம் வாடகைக்கு வழங்கப்படுவது இல்லை. இந்த நிலையில் இந்த வாடகை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி குளுகுளு வசதியுடன் ஒரு நாள் வாடகை கட்டணம் ரூ.60 ஆயிரமாகவும், குளுகுளு வசதி இல்லாமல் ரூ.50 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கட்டிடம் அரை நாள் வாடகைக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலையில் அரை நாளுக்கு வாடகையாக ரூ.30 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கன்னட நாடகங்கள் மற்றும் சிறப்பு அனுமதி பெற்று நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இந்த மாற்றி அமைக்கப்பட்ட புதிய கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Next Story