கேரளாவில் மூத்த கம்யூனிஸ்டு தலைவர் பெர்லின் குன்கானந்தன் நாயர் காலமானார்
கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் கண்ணூர் மாவட்டம் நாரத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டில் இருந்த அவர் நேற்று காலமானார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் பத்திரிகையாளர் பெர்லின் குன்கானந்தன் நாயர். கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் கண்ணூர் மாவட்டம் நாரத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டில் இருந்த அவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 97.
கேரள முன்னாள் முதல்வர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஏ.கே.கோபாலன் மற்றும் ஈ.கே.நாயனார் உட்பட பல கட்சித் தலைவர்களுடன் நெருங்கி பழகியவர் பெர்லின் குன்கானந்தன் நாயர். இவரது மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
விஜயன் தனது இரங்கல் செய்தியில், "கிழக்கு ஜெர்மனி மற்றும் சோசலிஸ்ட் பிளாக் பற்றிய செய்திகளை பல தசாப்தங்களாக உலகிற்கு தெரிவித்தவர்" நாயர் என்று குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story