பகவத் கீதை மதநூல் இல்லை: கர்நாடக கல்வி மந்திரி பேட்டி


பகவத் கீதை மதநூல் இல்லை:  கர்நாடக கல்வி மந்திரி பேட்டி
x

பகவத் கீதை கடவுளை வழிபடுவது பற்றியோ அல்லது எந்தவொரு மத நடைமுறைகளை பின்பற்றவது பற்றியோ பேசவில்லை என கர்நாடக கல்வி மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.


பெங்களூரு,


கர்நாடக தொடக்க கல்வி மந்திரி பி.சி. நாகேஷ் கூறும்போது, கர்நாடகத்தில் தற்போது உள்ள பள்ளி பாடத்திட்டத்தின் கீழ் பகவத்கீதை போதனைகள் சேர்க்கப்படாது. அத்தகைய எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால் வருகிற டிசம்பர் மாதம் முதல் இந்த பாடத்திட்டத்தில் தார்மீக பாடத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

அந்த பாடத்தில் பகவத்கீதை போதனைகளை சேர்த்து குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய ஒரு குழு அமைத்துள்ளோம். அந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் பகவத்கீதை சேர்க்கப்படும் என கூறினார்.

இந்த நிலையில், பி.சி. நாகேஷ் இன்று கூறும்போது, குரான் ஒரு மதநூலாக உள்ளது. கீதை அப்படி இல்லை. அது கடவுளை வழிபடுவது பற்றி பேசவோ அல்லது எந்தவொரு மத நடைமுறைகளை பின்பற்றவது பற்றியோ பேசவில்லை. அது ஒரு நல்ல விசயம் கொண்டது.

அதனால் மாணவர்களை அது ஈர்க்கிறது. சுதந்திர போராட்டத்தின்போது கூட, கீதையில் இருந்து மக்கள் போரிடுவதற்கான ஊக்கம் பெற்றனர் என கூறியுள்ளார்.

கடந்த காலங்களிலும் இதனை வலியுறுத்தி அவர் பேசியுள்ளார். கர்நாடக கல்வி சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள பள்ளிகள் மதம் சார்ந்த பயிற்சி அளிக்கவோ அல்லது பாடத்திட்டங்களில் மத புத்தகங்களை அறிமுகப்படுத்தவோ முடியாது.

ஒருவர் கடவுளை (எடுத்துக்காட்டு இயேசு) பற்றி பேசலாம். அனைத்து மதங்களை பற்றியும் பேசும்போது, கிறிஸ்தவம் பற்றி விவாதம் மேற்கொள்ளலாம்.

ஆனால், கர்நாடக கல்வி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு பள்ளியிலும், எந்தவொரு மதமும் பயிற்றுவிக்கவோ அல்லது அதனை கொண்டாடவோ சட்டத்தில் இடமில்லை. பைபிள் மற்றும் குரான் ஆகியவை மதம் சார்ந்த புத்தகங்கள் என்று கூறினார்.


Next Story