பிரதமர் மோடி உடன் பூட்டான் மன்னர் சந்திப்பு
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ராவை இன்று சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பூட்டான் மன்னருடன் ஒரு சிறப்பான சந்திப்பு நடந்தது. நெருக்கமான மற்றும் தனித்துவமான இந்தியா-பூடான் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்காக பல்வேறு யோசனைகள் விவாதிக்கப்பட்டன. எங்கள் உறவுகளை வடிவமைப்பதில் அடுத்தடுத்து ட்ருக் கியால்போ வழங்கிய வழிகாட்டும் பார்வைக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்தேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பூடான் மன்னர் வாங்சுக் , இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் செல்லும் வழியில் இந்தியா வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story