பீகார்: 283 தேடப்படும் குற்றவாளிகள், 57 நக்சல்கள் கைது


பீகார்:  283 தேடப்படும் குற்றவாளிகள், 57 நக்சல்கள் கைது
x

பீகாரில் 2022-ம் ஆண்டில், தேடப்படும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 283 பேர் மற்றும் 57 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.



பாட்னா,


பீகாரில் பாட்னா நகர ஏ.டி.ஜி.யான காவல் துறை உயரதிகாரி கங்வார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, பீகாரில் 2022-ம் ஆண்டு முழுவதும், சிறப்பு அதிரடி படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில், தேடப்படும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 283 பேர் மற்றும் தேடப்படுவோர் பட்டியலில் உள்ள 6 நக்சலைட்டுகள் உள்பட மொத்தம் 57 நக்சலைட்டுகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.

அவர்களிடம் இருந்து 14 ஆயுதங்கள், 3 ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஏ.கே.-56 ரக துப்பாக்கி ஒன்று என பல்வேறு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இவற்றில் போலீசாரிடம் இருந்து பறித்து செல்லப்பட்ட 5 ஆயுதங்களும் அடங்கும் என அவர் கூறியுள்ளார்.

பீகார் தவிர, உத்தர பிரதேசம், டெல்லி, ஜார்க்கண்ட், சத்தீஷ்கார், அரியானா, மராட்டியம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் 33 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.


Next Story