பீகாரில் பாஜக - ஐஜத விலகல்? ஆளுநரை மாலை 4 மணிக்கு சந்திக்கிறார் நிதிஷ்குமார்


பீகாரில் பாஜக - ஐஜத விலகல்?   ஆளுநரை மாலை 4 மணிக்கு சந்திக்கிறார் நிதிஷ்குமார்
x
தினத்தந்தி 9 Aug 2022 1:29 PM IST (Updated: 9 Aug 2022 1:37 PM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநில ஆளுநர் பகுசவுகானை இன்று மாலை 4 மணிக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் சந்திக்க உள்ளார்.

பாட்னா,

பீகாரில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும் இடம் பெற்று உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ்குமாரின் ஐஐத விலகும் என கூறப்படும் நிலையில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மாலை 4 மணிக்கு ஆளுநர் பகு சவுகானை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின் போது ராஷ்ட்ரீய தனதா தளத்தின் ஆதரவு கடிதத்தையும் நிதிஷ்குமார் தர உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சரவை கலைப்புக்கான கடிதத்தை முதல்-மந்திரி நிதிகுமார் வழங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் ஆட்சியமைக்க திட்டம் என தகவல் தெரிவிக்கின்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் ஆதரவுக்கடித்தையும் ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பீகார் சட்டசபையில் பாஜக 77, ஐக்கிய ஜனதா தளம் 45, காங்கிரஸ் 19, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 79, சிபிஐஎம்எல்(எல்) தலைமையிலான இடதுசாரிகள் 16,


Next Story