பீகார்: ஏ.சி. ரெயில் பெட்டியில் திடீர் தீ விபத்து - உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு
ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்ட நிலையில், அதில் இருந்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
பாட்னா,
பீகார் மாநிலத்தில் ஆவாத் அசாம் விரைவு ரெயிலின் ஏ.சி. பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ரெயில் முசாபர்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கிளம்பி, திப்ருகார் நோக்கி சென்று கொண்டிருந்தது.
ரெயில் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அதன் ஏ.சி. பெட்டியில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதையடுத்து உடனடியாக அந்த ரெயில் நிறுத்தப்பட்ட நிலையில், அதில் இருந்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இதையடுத்து தீ பெரிய அளவில் பரவாமல் உடனடியாக அணைக்கப்பட்டது. புகை வெளியேறியவுடன் ரெயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் ரெயிலில் இருந்து வெளியேறியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story